இந்திய கிரிகெட் அணியின் வீரர்கள் 4 உள்பட 7 பேருக்கு கொரோனா.. - பிசிசிஐ தகவல்..

 
கிரிக்கெட் வீரர்களுகு கொரோனா


வெஸ்ட் இன்ண்டீஸ்  அணிக்கு எதிராக களமிறங்க இருந்த இந்திய கிரிக்கெட்  வீரர்கள் 4 பேர் உட்பட ஏழு பேருக்கு  கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.  

இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான  ஒருநாள் கிரிக்கெட் போட்டி  வரும்  6ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்க இருந்தது. இந்நிலையில் இந்த தொடரில் விளையாட இந்திய அணியில் இடம்பெற்றிருந்த  பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பவுலர் சைனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர்,  ருதுராஜ் கைக்வாட்,   கூடுதல் வீரர் நவ்தீப் சைனி மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் உட்பட ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட ஏழு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,   வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை திட்டமிட்டபடி நடத்த மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

கொரோனா பரிசோதனை

ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி தற்போது அகமதாபாத்தில்  முகாமிட்டிருக்கிறது.   இந்த நிலையில்  கிரிக்கெட் வீரர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள மற்ர வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய இந்திய கிரிக்கெட் கவுன்சில்  முடிவு செய்துள்ளதாக கூறியிருக்கிறது.