டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியல் - அஸ்வினுக்கு 2-வது இடம்

 
aswin

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கபில் தேவை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணியின் சொதப்பலான ஆட்டத்தால் 5 நாட்கள் நடைபெற வேண்டிய போட்டி 3 நாட்டிகளிலேயே நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

indian team

இந்த போட்டியில் 174 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயானாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் ரவிச்சந்திரா அஸ்வினும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். அவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

aswin

இந்த பட்டியலில் இதற்கு முன்பு வரை 434 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் 2-வது இடத்தில் இருந்தார். இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அவர், கபில்தேவின் சாதனையை முறியடித்தார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 619 விக்கெட்டுகளுடன் முன்னாள் வீரர் அனில் கும்பிளே முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.