ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்

 
asia cup

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட தொடர் நாளை முதல்  செப்டம்பர் 11ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. துபாயில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. வருகிற 28ம் தேதி துபாயில் நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. இதேபோல் பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளன.  

asia cup



கடந்த 'டி-20' உலக கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து திரும்பியது. இதனால் வருகிற 28ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.முதலில் லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறும்.இதில் நான்கு அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். கடைசியில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள், செப். 11ல் நடக்கவுள்ள இறுதி போட்டிக்கு முன்னேறும்.