ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் எப்போது ? - வெளியானது அறிவிப்பு

 
Asia cup

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11 தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளாக நடத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டு நடைபெற வேண்டிய தொடர் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ஆசிய கவுன்சில் கூட்டம் கூடியது. இதில் இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை டி20 வடிவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11 தேதி வரை போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. 

asia cup

1984ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இதுவரை இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை இந்தியா 7 முறை கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில் ரோகி ஷர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. துபாயில் நடைபெற்ற அந்த போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. ஆசிய கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது. இதில் அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நான்கு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் முதல் இடத்தை பிடிக்கும் அணி லீக் போட்டிக்கு தகுதி பெறும்.