நியூசிலாந்துக்கு எதிரான போட்டி - ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சு

 
Aus vs nz

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

8வது டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த  16ம் தேதி தொடங்கிய போட்டி நவம்பர் 13-ம் தேதி வரை  நடைபெறவுள்ளது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதேபோல் தகுதி சுற்றில் விளையாடிய 8 அணிகளில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறின.  இந்நிலையில் இன்று சூப்பர் 12 சுற்று நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது. 

australia

நியூசிலாந்து அணி : டெவோன் கான்வே, ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட் உள்ளிட்டோர் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி : ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.