ஷேன் வாட்சனுக்கு இன்று பிறந்தநாள் - ரசிகர்கள் வாழ்த்து

 
watson

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

ஷேன் வாட்சன்  1981ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிறந்தார். வாட்சன் பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் திறமை வாய்ந்தவராக திகழ்ந்தார். இவருக்கு ஆஸ்திரேலியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகம் ஆனார். இவர் டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக 2004ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இதேபோல் டி20 போட்டியை பொறுத்தவரையில் 2006ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் முதன் முதலில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினார். இதேபோல் இவர் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 

watson

இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாட்சன் 3731 ரன்கள் மற்றும் 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதேபோல் 190 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வாட்சன் 5,757 ரன்களும், 168 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளை பொறுத்தவரையில் 58 போட்டிகளில் விளையாடி 1, 462 ரன்கள் மற்றும் 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதேபோல் 2008ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஐபில் போட்டிகளில் விளையாடிய வாட்சன் மொத்தம் 3874 ரன்கள் மற்றும் 92 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடைசியாக வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2020ம் ஆண்டு விளையாடினார். 

இந்நிலையில் வாட்சன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.