இந்தியா-பாகிஸ்தான் போட்டியை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை - ஆஸ்திரேலிய வீரர்

 
Virat

இந்தியா - பாகிஸ்தான் போட்டி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இருந்ததாக ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.

நேற்று முன் தினம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலா 4 ரன்களில் வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் 15 ரன்களிலும், அக்சர் பட்டேல் 2 ரன்களிலும் வெளியேறினர். இதனையடுத்து கூட்டணி அமைத்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். 

IND Virat

இந்நிலையில் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா அவுட்டாகினார். இதனையடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்க அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து வீசிய பந்து நோபால் ஆகிய நிலையில், அதில் விராட் கோலி சிக்சர் அடித்தார். இதனையடுத்து 3 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஃப்ரீகிட் பால் போல்ட் ஆகி பின்னால் சென்றது. அதில் 3 ரன்கள் கிடைத்தது. 
அடுத்து 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் ஷ்டம்பிங் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் ஒரு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆர்.அஸ்வின் களமிறங்கினார். இந்நிலையில் அந்த பந்து ஒயிட் ஆனது. இதனையடுத்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், தூக்கி அடித்து ஒரு ரன் எடுத்து வெற்றியை பெற்றுக்கோடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை நின்று போராடிய விராட் கோலி 82 ரன்கள் எடுத்தார். 

marsh

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இருந்ததாக ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார். . இது குறித்து மெல்போர்னில் பேசிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளதாவது: மெல்போர்னில் இதைவிட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை .இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எப்போதுமே பார்க்க முடியாத நம்ப முடியாத ஒரு ஆட்டமாக அது இருந்தது. என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இதற்கு பிறகு உலககோப்பையை கைப்பற்றும் எங்களது எண்ணத்தை அங்கேயே நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் போது அவரது ஆட்டம் ஆச்சரியமாக இருக்கிறது. 12 மாதங்கள் அவர் அலட்சியமாக இருந்துள்ளார். உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார், இது பார்ப்பதற்கு நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ். இவ்வாறு அவர் கூறினார்.