டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

 
india

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி கடந்தாண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் போட்டி இன்று முதல் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்  ஜூலை 7, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டி20 போட்டிக்கு ஒரு அணியும், அடுத்த இரண்டு டி20 போட்டிக்கு ஒரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

team india


 
முதல் டி-20 போட்டிக்கான இந்திய அணி:- ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோ பட்டேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

2வது மற்றும் 3வது டி20 போட்டிக்கான இந்திய அணி:- ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (வி.கே.), ரிஷப் பந்த் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர ஜடேஜா. அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக் 

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:- ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கி.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சஹால்,  பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.