பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று பிறந்தநாள்

 
ganguly

பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன சவுரவ் கங்குலி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

தாதா என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1972ம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட கங்குலி படிப்படியாக முன்னேறி 1992ம் ஆண்டு முதன் முதலாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். 1992ம் ஆண்டும் முதல் 2008ம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி ஒரு இரட்டை சதம், 16 சதங்கள், 35 அரைசதங்கள் உட்பட 7,212 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல் 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி 22 சதங்கள், 72 அரைசதங்கள் உட்பட 11 ஆயிரத்து 363 ரன்கள் சேர்த்துள்ளார்.

ganguly

இதேபோல் ஐபிஎல் போட்டிகளிலும் 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை விளையாடியுள்ள கங்குலி 59 போட்டிகளில், ஆயிரத்து 349 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக கடினமாக உழைத்த சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ளார்.

ganguly

இந்நிலையில், கங்குலி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனிடையே கங்குலியின் பிறந்தநாள் விழாவில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் கங்குலியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.