வங்கதேச அணி நிதான ஆட்டம் - வெற்றி பெற 387 ரன்கள் தேவை

 
ind test ind test

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 நிலையில், வங்கதேச அணி வெற்றி பெற 471 ரன்கள் தேவைப்படுகிறது. 

வங்கதேச நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன் தினம் தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் சிறப்பாக விளையாடியது. இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். இதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்கள் எடுத்தார். 

இதனையடுத்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி  இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இன்று தொடர்ந்து மூன்றாவது நாளில் ஆடிய அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.  குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர். சுப்மன் கில்லுக்கு இது முதல் சர்வதேச சதம் ஆகும். இதனிடையே இந்திய அணி 258 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக கேப்டன் கே.எல்.ராகுல் அறிவித்தார். இதனையடுத்து வங்கதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ind vs ban test

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நிலையில், விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.  இந்நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. தற்போது உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  வங்கதேச அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து நிதான் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.