இந்திய அணியின் கேப்டனாகிறார் பும்ரா ?

 
bumrah

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டியில் ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் இங்கிலாந்து சென்று பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

rohit reaction

இந்நிலையில், நேற்று இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ரோகி சர்மா அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். வருகிற ஜூலை 1ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்ற கூறப்படுகிறது.   ஏற்கனவே கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகிய நிலையில்,  ரோகித் சர்மாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்பட்ட சம்பவம் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

bumrah

இந்நிலையில், ரோகி சர்மாவிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கபில் தேவிற்கு பிறகு 35 ஆண்டுகள்  கழித்து வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.