நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா

 
kane williamson

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த கடந்த ஜூன் 2ம் தேதி முதல் ஜூன் 06ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கொலிண்டி கிராண்ட் ஹாம் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், நியூசிலாந்து ரசிகர்களுக்கு அதிர்சி தரும் மற்றொரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

kane villiamsan

அதாவது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கேன் வில்லியம்சனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கேன் வில்லியம்சன் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டாம் லேதம் அணியை வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வி அடைந்து 1-0 என்ற கணக்கில் பின் தங்கியுள்ள நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 5 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு 3வது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.