100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் - டேவிட் வார்னர் சாதனை

 
David warner

100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விறு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அதில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாற் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலாவதாக பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலாவது இன்னிங்சை ஆடி வருகிறது. தனது 100வது போட்டியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இரட்டை சதம் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3வது இரட்டை சதத்தை வார்னர் அடித்துள்ளார். மேலும், ஜோ ரூட்டுக்குப் பிறகு தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார்.