இதே நாள்... இதே தினம்....தோனி, ரெய்னாவின் ஓய்வுக்கு காரணம் என்ன ?- விவரம் இதோ!

 
dhoni raina

இதே சுதந்திர தின நாளில் தான், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாக விளங்கிய எம்.எஸ்.தோனியும், சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். 
 
2004ம் ஆண்டு முதல் முதலாக வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் மகேந்திர சிங் தோனி. பேட்டிங்கில் பந்துவீச்சாளர்களை திணறடித்த தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இந்திய ரசிகர்களை அவர் வசப்படுத்தியது. இந்நிலையில், 2007ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. இவரது தலைமையில் தான் இந்திய அணி, அதே ஆண்டில் 20 ஓவர் உலககோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. இதேபோல் 2005ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இலங்கைக்கு எதிராக போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்கினார் சுரேஷ் ரெய்னா. பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிலும் கைதேர்ந்தவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிகளவிலான ரன்களை குவித்துள்ள ரெய்னா மிஸ்டர் ஐபிஎல் என்றும் அழைக்கப்பட்டார். 

dhoni

இதேபோல் 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியிலும் இந்திய அணி கோப்பையை வென்றது தோனியின் தலைமையில் தான். இறுதி போட்டியில் 90 ரன்களுக்கு மேல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதேபோல் 2013ம் ஆண்டு நடைபெற்ற மின் உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் இந்திய அணிக்கு பெற்று தந்தார் தோனி. கடைசியாக 2019ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இதனையடுத்து அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார். 

dhoni

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி தோனி மற்றும் ரெய்னா இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்ததால் ரசிகர்கள் சற்று மன நிம்மதி அடைந்தனர். ரெய்னா சென்னை அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். 

இதனால்தான் சுரேஷ் ரெய்னா CSK வுக்கு வேணும் – #Raina

ஒரே நாளில் இருவரும் ஓய்வு பெற்றது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, ஆகஸ்ட் 15ம் தேதி ஓய்வு பெற வேண்டும் என்று இருவருமே முன் கூட்டியே திட்டமிட்டோம். தோனியின் ஜெர்சி எண் 7, என்னுடைய ஜெர்சி எண் 3, சேர்த்தால் 73, இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆடுகள் நிறைவு என்று எல்லாம் ஒன்று சேர்ந்த தினம் அன்று. எனவே இதை விட சிறந்த நாள் அமையாது என்று ஓய்வு பெற்று விட்டோம். இவ்வாறு தெரிவித்தார்.