இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் - இங்கிலாந்து அணி அறிவிப்பு

 
eng test squad

இந்தியாவிற்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டியில் ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் இங்கிலாந்து சென்று பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

rohit

இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுலும் காயம் காரணமாக விலகியுள்ளார். இதன் காரணமாக மயங் அகர்வால் கூடுதலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில், மயங் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்த்ர ஜடேஜா, அஸ்வின், சர்தூல் தாகூர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஸ்ரீகர் பரத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 


இந்நிலையில், இந்தியாவிற்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஹென்றி புரூக், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், ஜேக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரெய்க் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மேட் பாட்ஸ், ஆலி போப்
 உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.