டி20 உலக கோப்பையில் இருந்து பும்ரா விலகவில்லை - கங்குலி

 
Don't Talk, Get Blocked – Nagma to Followers on Ganguly's b’day

டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகிவில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 அணிகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.  இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 

jasprit bumrah

இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியானது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. இதன்காரணமாக அவர் டி20 உலக தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்,  இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பும்ரா இன்னும் விலகவில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் இது குறித்து நாங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம் என கூறியுள்ளார்.