மகளிர் உலக கோப்பை இறுதி போட்டி - ஆஸ்திரேலியா 356 ரன்கள் குவிப்பு

 
Australia women

மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 356 ரன்கள் குவித்துள்ளது. 

ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திலாந்து மகளிர் அணியும் ஆஸ்திரேலிய மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். கிறிஸ்ட் சர்ச்சியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது.

Healy

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய வீராங்கணைகள் இங்கிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹிலே மற்றும் ஹைனாஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹைனாஸ் 68 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், ஹிலே சதம் விளாசினார். 170 ரன்கள் சேர்த்த ஹிலே ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கார்டனர் 1 ரன்களில் வெளியேறிய நிலையில், லான்னிங் 10 ரன்களில் நடையை கட்டினார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மூனே 62 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சுருப்சோல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 357 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது.