தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி சாதனை படைக்குமா இந்திய அணி?

 
rishap pant

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடுகிறது. இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கே.எல்.ராகுல் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தலைமை தாங்கி கோப்பையை வென்ற கார்த்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் குல்தீப் யாதவும் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றால், சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கும். 

team india

உத்தேச இந்திய அணி : ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (c, wk) கார்த்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷால் பட்டேல், ஆவேஷ் கா, யூஷ்வேந்திர சஹால் உள்ளிட்டோர் இந்திய அணியில் இன்று இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.