ஜிம்பாப்பேவை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா? - இன்று 3வது ஒருநாள் போட்டி

 
ind vs zim

இந்தியா மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 

ஜிம்பாப்பே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12.45 மணிக்கு அங்குள்ள ஹரார் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்று பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஜிம்பாப்பே அணியை ஒயிட் வாஷ் செய்ய காத்திருக்கிறது. இதேபோ இன்றைய போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதலை தேடிக்கொள்ள ஜிம்பாப்பே அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ind vs zim

இந்திய அணியின் உத்தேச பட்டியல்: சுப்மன் கில், ஷிகர் தவான், இஷான் கிஷான், கே.எல்.ராகுல்(கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், சர்தூல் தாகூர் அல்லது தீபக் சஹார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அல்லது ஆவேஷ் கான் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.