ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தி கோப்பையை வென்ற குஜராத்

 
gt

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

15வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி நேற்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

rr

ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்வி ஜேஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே பேட்டிங்கில் சொதப்பியது. யாஷ்வி ஜேஸ்வால் 22 ரன்களில் வெளியேறிய நிலையில் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களில் நடையை கட்டினார். படிக்கல் 2 ரன்களிலும், பட்லர் 39 ரன்களிலும் வெளியேறினர். இதேபோல் அடுத்து வந்த ஹெட்மயர் 11 ரன்களிலும், அஸ்வின் 6 ரன்களிலும், ரியான் பராக் 15 ரன்களிலும் வெளியேறினர். இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.

GT

இதனையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியது. விருத்திமான் சஹா 5 ரன்களிலும், மேத்திவ் வேட் 8 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் கார்த்திக் பாண்டியா, சுப்மன் கில்லுடன் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 34 ரன்கள் சேர்த்து கார்த்திக் பாண்டியா அவுட்டாகிய நிலையில், அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடி காட்டினார். இதன் மூலம் குஜராத் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 45 ரன்கள் சேர்த்தார். நடப்பு சீசனில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணி, அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது.