கோப்பை யாருக்கு ? இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டும் குஜராத்-ராஜஸ்தான் அணிகள்

 
IPL

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மற்ற அணிகள் லீக் போட்டியுடன் நடையை கட்டின.  முதல் தகுதி சுற்று போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்ட குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் வெளியேறுதல் சுற்றில் லக்னோ அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லக்னோ அணி வெளியேறிய நிலையில், பெங்களூரு அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது தகுதி சுற்று போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் அணி இன்று நடைபெறும், இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. 

RRvsGT

ஏற்கனவே குஜராத் அணியுடன் முதல் தகுதி சுற்று போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ராஜஸ்தான் அணி தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் குஜராத் அணியும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர போடி மைதானத்தில் தொடங்குகிறது. இறுதிப்போட்டியை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15-வது சீசன் ஐபிஎல் சீசன் இன்றுடன் முடிவுக்கு வருவது குறிப்பிடதக்கது.