திக்.. திக்.. ஆட்டம்... கடைசி வரை பரபரப்பு - பஞ்சாப்பை பஞ்சராக்கிய குஜராத்

 
GT

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 16-வது போட்டியில் மயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கார்த்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. 

Punjab

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் மயங் அகர்வால் வழக்கம் போல் சொதப்பினார். 5 ரன்கள் எடுத்திருந்த போது கார்த்திக் பாண்டியா ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக வந்த பேர்ஸ்டோ 8 ரன்களில் வெளியேறினார். தவான் 35 ரன்கள் சேர்த்து அவுட்டான நிலையில், ஜித்தேஷ் சர்மா 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியை ஸ்கோரை உயர்த்தினார். ஓடியன் ஸ்மித் டக் அவுட் ஆகிய நிலையில், ஷாருகான் 15 ரன்களும், ராகுல் சஹார் 22 ரன்கள் எடுத்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. 

gt

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. மெத்திவ் வேட் 6 ரன்களில் வெளியேறினாலும் மறுமுனையில் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாய் சுதர்சன் 35 ரன்களில் வெளியேறிய நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 96 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதேபோல் கேப்டன் கார்த்திக் பாண்டியா 27 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்நிலையில், கடைசி 2 பந்துகளில் குஜராத் அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் களமிறங்கிய ராகுல் திவேத்தியா 2 பந்துகளில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு அணியை வெற்றி பெற செய்தார்.