ரஸ்ஸல் ருத்ரதாண்டவம் - பஞ்சாப்பை பஞ்சராக்கிய கொல்கத்தா

 
Russel

ஆண்ட்ரேட் ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால்  பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. 

Umesh yadav

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் மயங் அகர்வால் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், உமேஷ் யாதவ் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அதிரடி காட்டிய ராஜபக்சே 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக தவான் 16 ரன்களிலும், லிவிங்ஸ்டன் 19 ரன்களிலும், ராஜ் பவா 11 ரன்களிலும் வெளியேறினர். இதேபோல் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டி பறிகொடுக்க, அந்த அணி 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

KKR

இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், இறுதியில் சிறப்பாக விளையாடியது. வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும், ரஹானே 12 ரன்களிலும் வெளியேறினர். அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 26 ரன்களிலும், நித்தீஷ் ரானா முட்டை ரன்களிலும் வெளியேறினர். அடுத்தாக களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் சாம் பில்லிங்ஸ் உடன் கூட்டணி அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த அணி 14.3 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்து வெற்ரி பெற்றது. 31 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த ரஸ்ஸல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதேபோல் சாம் பில்லிங்ஸ் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.