தோல்வியில் தத்தளிக்கும் மும்பை - கதறிய ரோகித் சர்மா

 
Rohit

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், மும்பை அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து  168 ரன்கள் எடுத்தது. அபாரமாக விளையாடிய கேப்டன் கே.எல்.ராகுல் 103 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இது நடப்பு சீசனில் அவர் அடித்த இரண்டாவது சதமாகும். மனிஷ் பாண்டே 22 ரன்கள் சேர்த்த நிலையில் மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

KL Rahul

இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வழக்கம் போல தொடக்கத்திலேயே சொதப்பியது. இஷான் கிஷான் 8 ரன்களில் வெளியேறிய நிலையி, அடுத்து வந்த டிவால்ட் பிரேவிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் ஷர்மா 39 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.  அடுத்ததாக வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் வெளியேறினார். திலக் வர்மா 38 ரன்களும், பொல்லார்டு 19 ரன்களில் வெளியேறினார். இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது மும்பை அணிக்கு 8-வது தோல்வியாகும். 

MI

போட்டிக்கு பின்னர் வர்ணனையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்தான் இங்கு பிரச்சினையே. நான் உட்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் மிடில் ஓவர்களின்போது தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்துவிடுகிறோம். ஒருவராவது கடைசிவரை விளையாடியே ஆக வேண்டும். அதுமட்டுமல்ல ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பாவது இருக்க வேண்டும். இந்த இரண்டும் ஒரு போட்டியில்கூட இருந்ததில்லை. ஒருவர்கூட லாங் இன்னிங்ஸ் விளையாடாமல் இருப்பதுதான் எனக்கு வருத்தத்தை உண்டாக்குகிறது. எங்களுடன் விளையாடும் மற்ற அணிகள் இதனை சுலபமாக செய்கிறார்கள். தோல்விகளுக்கு இதுதான் முக்கிய காரணம். ஒருவர் கடைசிவரை நிலைத்து நின்று விளையாடியிருக்க வேண்டும். இனி வரும் போட்டிகளில் முடிந்தவரை அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க முடிவுசெய்துள்ளேன். இவ்வாறு கூறினார்.