தொடர்ந்து சொதப்பும் ரோகித் படை - பெங்களூரு அணிக்கு 3வது பெற்றி

 
rohit

ஐபிஎல் டி20 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பாப் டுபிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை அணி முதலாவதாக பேட்டிங்க் செய்தது. 

RCB

தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். இருவருமே 26 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய டிவால்ட் ப்ரேவிஸ் 8 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய் சூர்ய குமார் யாதவ் அணியை சரிவில் இருந்து மீட்டார். திலக் வர்மா ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், பொல்லார்டும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். இறுதியாக மும்பை அணி 30 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் எடுத்தார். 

RCB

இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியாது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் பாப் டுபிளெசிஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மறுமுனையில் அனுஜ் ராவத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 66 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த விராட் கோலி 48 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதியாக பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்க்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.