குஜராத்தின் ஆதிக்கம் தொடருமா ? - இன்று ஐதராபாத் அணியுடன் மோதல்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 20 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 21-வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள டி.ஒய். பட்டேல் விளையாட்டு வாரிய மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமையிலான் குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணியாக திகழ்கிறது. இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் சுப்மன் கில், கேப்டன் கார்த்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, சாய் சுதர்சன் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரையில், ரஷித் கான், முகமது ஷமி, லோகி பெர்குசன் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இதுவை வெற்றிப்பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கும் குஜராத் அணி இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

ஐதராபாத் அணியை பொறுத்துவரை இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில், 2-ல் தோல்வி அடைந்துள்ள நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் அந்த அணியில், கேப்டன் கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, நிக்கோலஸ் பூரான் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறனர். இதேபோல் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னோக்கி செல்ல ஐதராபாத் அணி முயற்சி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


