குஜராத்தின் வெற்றிப் பயணம் தொடருமா ? - பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரீட்சை

 
GTvsPBKS

ஐ.பி.எல். தொடரில் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். 

15-வது சீசன் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 16-வது லீக் போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Punjab

பஞ்சாப் அணி  இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் மயங் அகர்வால், ஷிகர் தவான், லிவிங்ஸ்டன், ராஜபக்சே, ஷாருக்கான் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் ரபடா, ராகுல் சஹார் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். 

gt

குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணியாக உள்ளது. இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. குஜராஜ் அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, கேப்டன் கார்த்திக் பாண்டியாக் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் ரஷித்கான், முகமது ஷமி, லோக்கி பெர்குசன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். தொடர் வெற்றி பெற்று வரும் குஜராத் அணி இந்த போட்டியிலும் வெல்லும் முனைப்பில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளது.