ஐபிஎல் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதல்

 
KKRvsSRH

 ஐபில் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 24 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 25வது லீக் போட்டி நடைபெறுகிறது. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

kkr

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் அந்த அணியில், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரஸ்ஸெல் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், சுனில் நரேன், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

SRH

ஐதராபாத் அணியை பொறுத்தவரையில், விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இருந்த போதிலும் கடைசி இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் அந்த அணியில், கேப்டன் கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா, நிக்கோலஸ் பூரான், உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் நடராஜன், புவனேஷ்வர் குமார், உமரான் மாலிக் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.