ஐ.பி.எல். இன்றைய போட்டியில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதல்

 
RRvsGT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

gt

குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் ஐதராபாத் அணியுடன் தோல்வியை தழுவியது குஜராத் அணி. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் குஜராத் அணி உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் அந்த அணியில், சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, கேப்டன் கார்த்திக் பாண்டியா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இதேபோல் பந்துவீச்சில் ரஷித் கான், பெர்குசன் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். 

rr

இதேபோல் ராஜஸ்தான் அணியும் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில், 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் அணியும் பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் ஜாஸ் பட்லர்,  தேவ்தத் படிக்கல், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் அஸ்வின், சஹால், டிரெண்ட் போல்ட் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.