வெற்றி பயணத்தை தொடருமா சென்னை ? - ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள்

 
CSK

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் ஐதராபாத்-பஞ்சாப் அணிகளும், இரண்டாவது போட்டியில் சென்னை-குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

srh

பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் உள்ள டி.ஒய். பட்டேல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக அந்த அணி கடைசியாக விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இதேபோல் பஞ்சாப் அணியும் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. 

csk

இதேபோல் இரவு 7.30 மணிக்கு புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் தொடங்கும் மற்றொரு போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இருந்த போதிலும் கடைசியாக விளையாடிய போட்டியில் வெற்றி பெற்றது அந்த அணிக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் குஜராத் அணி, நடப்பு ஜாம்பியனான சென்னை அணியுடன் மோதவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.