ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்

 
IPL

ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா-குஜராத் அணிகளும், இரண்டாவது போட்டியில் பெங்களூரு-ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு செல்ல முடியும் என்பதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலுமே அந்த அணி தோல்வியை தழுவியது குறிப்பிடதக்கது. 

RCB

இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் பாப் டுபிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இதேபோல் ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.