முதல் வெற்றி பெறுமா மும்பை? - ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் போட்டிகள்

 
MIvsLSG

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் மும்பை-லக்னோ அணியும், இரண்டாவது போட்டியில் டெல்லி- பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3-ல் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதேபோல் மும்பை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலுமே தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறாத காரணத்தினால் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன இதன் காரணமாக இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்த அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

dcvsrcb

 

இதேபோல் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பாப் டூபிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. பெங்கரூரு அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதேபோல் டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.