தொடர் தோல்வியில் இருந்து மீளுமா சென்னை - பெங்களூரு அணியுடன் இன்று மோதல்

 
CSK

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் நடம்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

நடப்பாண்டு ஐ.பி.எல். தொடர் சென்னை அணிக்கு ஒரு மோசமான தொடக்கமாகவே உள்ளது. இதுவரை இல்லாத வகையில் முதல் 4 போட்டிகளில் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் சீசனில் அதிகம் முறை கோப்பையை வென்ற அணிகளில் பட்டியலில் சென்னை அணி மும்பைக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளது. இதுவரை சென்னை அணி 4 கோப்பைகளை வென்றுள்ளது. இதேபோல் அதிக முறை ஃப்ளே ஆஃப் சென்ற அணி மற்றும் அதிக முறை இறுதிபோட்டி வரை சென்ற அணி என்ற பெருமையும் சென்னை அணியையே சேறும்.

Chennai

இவ்வாறு பலம் பொருந்திய அணியாக இதுவரை வலம் வந்த சென்னை அணிக்கு நடப்பு சீசன் பெரிய இடியாக விழுந்துள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலுமே தோல்வியையே தழுவியுள்ளது. தோல்வியில் இருந்து மீள பல்வேறு மாற்றங்களை செய்தாலும் கூட தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதனால் கேப்டன் ரவீந்திர ஜடேஜா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. 

csk

பெங்களூரு அணியை பொறுத்தவரையில் கேப்சன் பாப் டுபிளெசிஸ் தலைமையில் வழுவாக உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கை பொருத்தவரையில் அந்த அணியில் கேப்டன் பாப் டுபிளெசிஸ், விராட் கோலி, மெக்ஸ்வேல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் வானிண்டு ஹசரங்கா, முகமது சிராஜ், சித்தார்த் கவுல், ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதவுள்ளதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி, இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய் பட்டேல் மைதானத்தில் தொடங்குகிறது.