இன்றைய ஐ.பி.எல். போட்டியில் டெல்லி-லக்னோ அணிகள் மோதல்

 
DCvsLSG

ஐபிஎல் டி20 தொடரில் இன்றைய லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 15-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டாக்டர் DY பட்டேல் விளையாட்டு மையம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

DC

டெல்லி அணி இதுவரை விளையாடியுள்ள 2 ஆட்டங்களில் ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி இரண்டாவது போட்டியில் குஜராஜ் அணியுடன் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரிஷப் பந்த், பிரித்வி ஷா, லலித் யாதவ் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். இதேபோல் டேவிட் வார்னர் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதேபோல் பந்துவீச்சில் ஷர்தூல் தாக்கூர், அக்‌ஷர் பட்டேல், அன்ரிச் நோர்டியா ஆகியோர் வழு சேர்க்கின்றனர். 

LSG

இதேபோல் லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் கே.எல்.ராகுல், டீ காக், ஈவன் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயூஸ் பதோனி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான். ஜாசன் ஹோல்டர் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.