ஹர்த்திக் பாண்டியா அபாரம் - இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

 
team india

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  முதலாவது டி20 போட்டி சவுதம்ப்டனின் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்றி இரவு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் இறுதியில் சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களில் வெளியேறிய நிலையில், இஷான் கிஷான் 8 ரன்களில் வெளியேறினார். இதனிடையே அதிரடி காட்டிய தீப ஹூடா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்தி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து தீபக் ஹூடா வெளியேறிய நிலையில், 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து சூர்யகுமார் யாதவும் வெளியேறினார். அடுத்த வந்த அக்‌ஷர் பட்டேல் 17 ரன்களில் வெளியேறிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்த்திக் பாண்டியா 51 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 11 ரன்களும், ஹர்ஷல் பட்டேல் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. 

hardik pandiya

இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலேயே வெளியேறிய நிலையில், ஜேசன் ராய் 4 ரன்களில் நடையை கட்டினார். டேவிட் மாலன் 21 ரன்களிலும், லிவிங்ஸ்டன் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இதேபோல் ஹரி புரோக் 28  ரன்களிலும், மொயின் அலி 36 ரன்களிலும், சாம் கரன் 4 ரன்களிலும் வெளியேறினர். இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

hardik

இதன் மூலம் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்தியதோடு, பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்த்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.