ரிஷப் பந்த், ரோகித் அபாரம் - தொடரை கைப்பற்றிய இந்தியா

 
india

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4 டி20 போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. 

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளில் 2ல் இந்தியாவும், ஒன்றில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றிருந்த இந்நிலையில், 4வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் நேற்று நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து முதலாவதாக பேட்டிங்க் செய்த இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. ரோகித் சர்மா 33 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த தீபக் ஹூடா 21 ரன்களும், ரிஷப் பந்த 44 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 30 ரன்களும், அக்சர் பட்டேல் 20 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி  59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.