கடைசி டி20 போட்டியிலும் வெற்றி - தொடரை கைப்பற்றிய இந்தியா

 
IND

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் 3ல் இந்தியாவும், ஒன்றில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றிருந்த இந்நிலையில்,  5வது டி20 போட்டி இன்று இரவு புளோரிடாவில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டதால் ரோகித் ஷர்மா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவு உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

team india

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 64 ரன்களும், தீபக் ஹூடா 38 ரன்களும், கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 28 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணி 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சிம்ரன் ஹெட்மயர் 56 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.