ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் - இந்திய அணி 186 ரன்கள் குவிப்பு

 
Ind vs aus

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்கள் குவித்துள்ளது. 

8-வது டி 20 உலக கோப்பை போட்டி இன்று முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 அணிகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி வருகிற 23ம் தேதி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இதனை முன்னிட்டு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. 

ind vs aus

முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. சிறப்பான தொடக்கம் அளித்த கே.எல்.ராகுல் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதேபோல் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.