இலங்கை அணிக்கு 447 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

 
rishap


இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இந்திய அணி, 447 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்தார். 

india

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அதிகபட்சமாக அந்த அணியில் மெத்தியூஸ் 43 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 303 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. 

india

அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 67 ரன்களும், ரிஷப் பந்த் 50 ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று பிற்பகலில் தொடங்கவுள்ள நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 419 ரன்கள் தேவையாக உள்ளது.