அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு - ஹர்திக் பாண்டியா கேப்டன்

 
ind vs ire

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முதல் டி20 போட்டி ஜூன் 26ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜூன் 28 ஆகிய தேதியும் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி அயர்லாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியை ஹர்த்திக் பாண்டியா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்திய ஹர்த்திக் பாண்டியா, தனது தலைமையில் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தார். இதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் அயர்லாந்து செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுவார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் துணை கேப்டானாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உம்ரான் மாலிக் உள்ளிட்டோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

Hardik pandiya

இந்திய அணி வீரர்கள் விவரம்: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), புவனேஸ்வர் குமார் (துணைக் கேப்டன்), இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.