வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் - இந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றம்

 
ban test

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் வங்கதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 

வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிகிறது.

ban test

இந்த நிலையில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாகிர் ஹசன் 15 ரன்களிலும், நஜ்முல் ஹுசைன் 24 ரன்களிலும் வெளியேறினர். வங்கதேச அணி உணவு இடைவேளை வரை 28 ஓவர்களுளில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனை அடுத்து அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியாக அந்த அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மோமினுள் 84 ரன்கள் எடுத்தார்.

ind vs ban test

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் இந்திய முதல்  இன்னிங்சில் வங்கதேசத்தை விட 26 ரன்கள் பின் தங்கியுள்ளது.