ரிஷப் பந்த் அபார ஆட்டம் - வலுவான நிலையில் இந்தியா

 
rishab pant

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி, வலுவான நிலையில் உள்ளது. 

கடந்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் 5 வது டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அந்த 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன்  மைதானத்தில் இன்று தொடங்கியது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டியில் ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நேற்று தொடங்கு டெஸ்ட் போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 

virat

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களிலேயே நடையை கட்டினர். கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்களிலும் வெளியேறினர். இதேபோல் அடுத்து வந்த விஹாரி 20 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதேபோல் ஸ்ரேயஸ் ஐயரும் 15 ரன்களில் வெளியேறினார். 

eng

அடுத்து வந்த ரிஷ்ப் பந்த் ரவீந்திர ஜடேஜாவுடன் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஒருநாள் போட்டியை போல் விளையடிய ரிஷப் பந்த் நான்கு பக்கமும் பந்துகளை பறக்கவிட்டார். இருவரும் அரைசதம் கடந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். இங்கிலாந்து அணியை அலறவிட்ட பந்த் சதம் விளாசினார். 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்திருந்த போது அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஷர்தூல் தாகூர் 1 ரன்னில் நடையை கட்டினார். ரவீந்திர ஜடேஜா 83 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேபோல் முகமது ஷமியும் களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது.