இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைக்குமா இந்தியா ?

 
team india test

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டலின் இன்று பிற்பகலில் நடைபெற்றது. 

கடந்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் 5 வது டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அந்த 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன்  மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டியில் ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5வது டெஸ்டில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ரிஷ்ப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

india test team

இந்திய அணியின் உத்தேச பட்டியல்: சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், , ரிஷப் பந்த், ரவீந்த்ர ஜடேஜா,  சர்தூல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்

இங்கிலாந்து அணியின் உத்தேச பட்டியல் : அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) சாம் பில்லிங்ஸ், மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட்,ஜேக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்