புஜாரா நிதான ஆட்டம் - வலுவான நிலையில் இந்தியா

 
pujara

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 125 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது. 
  
கொரோனா காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி,  இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன்  மைதானத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவது நாளில் இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பந்து 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும் எடுத்தனர். 

eng

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகட்சமாக பேர்ஸ்டோ 106 ரன்கள் எடுத்தார். 132 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டான நிலையில், அடுத்து வந்த விஹாரி 11 ரன்களிலும், விராட் கோலி 20 ரன்களிலும் வெளியேறினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பும்ரா அரைசதம் எடுத்தார். இதேபோல் ரிஷப் பந்த் 30 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.