தொடரை கைப்பற்றுமா இந்தியா - இன்று 2வது டி20 போட்டி

 
ind vs ire

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. 

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹர்த்தி பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி ஓவர்களாக 12 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிளக்காமல் இருந்தார். 

ind vs ire

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான் இரண்டாவது டி20 போட்டி டப்ளின் பகுதியில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் இந்திய அணியுடன் முதல் போட்டியில் தோல்வி அடைந்த அயர்லாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பதிலடி கொடுப்பதோடு, தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.