தென் ஆப்ரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? - இன்று 2வது ஒருநாள் போட்டி

 
ind vs zim

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் வென்றது. இதனிடையே  இவ்விரு அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி கடந்த 6ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நண்பகல் 1.30 மணிக்கு ராஞ்சியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்ரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. ஆகையால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி காயம் காரணமாக விலகியுள்ள தீபக் சஹாருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.