கோப்பையை வெல்லுமா இந்தியா? - இன்று 5வது டி20 போட்டி

 
ind vs sa

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் தென் ஆப்ரிகா முதல் இரண்டு போட்டியிலும், இந்தியா  கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் கடந்த 14ம் தேதி நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே கடந்த 17ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2க்கு 2 என சமநிலையில் உள்ளது. 

ind vs rsa

இந்நிலையில், 5வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்க அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. கோப்பையை யார் வெல்வார்கள் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளதால் இன்றைய போட்டியில் விருவிருப்புக்கு பஞ்சமிருக்காது.