தென் ஆப்ரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? - இன்று 2வது டி20 போட்டி

 
ind vs sa

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கட்டாக்கில் நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடுகிறது. கடந்த 9ம் தேதி முதல் வருகிற 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கே.எல்.ராகுல் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதேபோல் குல்தீப் யாதவும் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகினார். ரிஷ்ப் பந்த் தலைமையில் முதல் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் 211 ரன்கள் சேர்த்த போதும் பந்துவீச்சில் கோட்டை விட்டதால் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டங்காரர்களை எளிதில் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் டேவிட் மில்லர் மற்றும் டூசன் விக்கெட்டை எடுக்க முடியாமல் வெற்றியை நழுவ விட்டனர். 

ind vs sa

இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று  தொடரில் முன்னிலை பெறும் வகையில் தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.