மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

 
ind women

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தி நடைபெற்று வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு போட்டிக்கு முன்னேறின. இன்று காலை முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 42 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவூர் 36 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.