இந்திய வேகப்பந்துவீச்சு விரைவில் எழுச்சி பெறும் - ரோகித் சர்மா நம்பிக்கை

 
rohit

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் விரைவில் எழுச்சி காண்பர் என்ற நம்பிக்கை உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி  ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. 
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி  19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.  

ind vs aus

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளித்தது. இருப்பினும் சில பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, கடைசி கட்ட பந்துவீச்சில் நல்ல முன்னேற்றம் தேவைப்படுகிறது. இத்தொடரில் எங்கள் அணியினர் சவால்களை தைரியமாக எதிர்கொண்டனர்.காயத்தில் இருந்து மீண்டு, போட்டிக்கு திரும்பிய எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் விரைவில் எழுச்சி காண்பர் என்ற நம்பிக்கை உள்ளது. இவர்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும். ஏனெனில் நீண்ட நாட்களுக்கு பின், போட்டியில் களமிறங்கி இழந்த 'பார்மை' மீட்பது சவாலானது.பேட்டிங்கில் சூர்யகுமார், கோஹ்லி, ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை அளித்தனர். இவர்களது 'பார்ம்' அடுத்து வரும் போட்டிகளிலும் தொடரும் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.